தமிழக மக்களை கூலிப்படைக் கும்பலிடம் அடகு வைத்துவிட்டதா திராவிட மாடல் அரசு?- அண்ணாமலை

 
a

ஒட்டுமொத்த தமிழக மக்களின் பாதுகாப்பையும் கூலிப்படைக் கும்பலிடம் அடகுவைத்துவிட்டதா இந்த திராவிட மாடல் அரசு? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

annamalai mkstalin

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “

🩸சம்பவம் 1 : திரு. செல்வக்குமார் - சிவகங்கை பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர்.

🩸சம்பவம் 2 : திரு. பத்மநாபன் - கடலூர் அதிமுக மாநகராட்சி நிர்வாகி

🩸சம்பவம் 3 : திரு. ஜாக்சன் - கன்னியாகுமரி காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகி. 

ஒரே நாளில் முப்பெரும் கட்சிகளைச் சார்ந்த மூன்று அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் பாதுகாப்பையும் கூலிப்படைக் கும்பலிடம் அடகுவைத்துவிட்டதா இந்த திராவிட மாடல் அரசு? சட்டம் ஒழுங்கை என் சட்டைப்பையில் வைத்துக் காப்பேன் என்று வீர வசனம் பேசிய வாய்ச்சவடால் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தமிழகத்தையே நடுங்க வைத்த இம்மூன்று படுகொலைகளைப் பற்றி கள்ள மௌனம் காக்கிறார்.

சரி, முதல்வர்தான் மூன்று ஆண்டுகளாக மௌனவிரதம் இருக்கிறார் என்று பார்த்தால், அவரின் சேனைத் தளபதிகளோ, “நாங்கள்தான் நடவடிக்கை எடுக்குறோம்-ல அதுக்கும் மேல என்ன செய்ய முடியும்” என்று தமிழக சட்டமன்ற தலைவர் திரு. அப்பாவு அவர்களும், “முன்விரோதம் காரணமாக பண்ற கொலைக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை” என்று திமுக அமைச்சர் திரு. ரகுபதி அவர்களும் விட்டேத்தியான பதிலைக் கூறி தட்டிக் கழிக்கிறார்கள். 

Image

தமிழகத்தில் தொடரும் கொலைக் குற்றங்களைக் கண்காணிக்க வேண்டிய காவல்துறையும், காவல்துறையைக் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க, வன்முறைக் குற்றங்களால் மூச்சுத் திணறி முடங்கியுள்ளது தமிழகம். இப்படிப்பட்ட நிலையில், எத்திசையும் குலை நடுங்கும் படுகொலையின் மரண ஓலங்களின் நடுவே, நம் தமிழணங்கு நிற்கிறாள் என்றால் மிகையில்லை..!” எனக் குறிப்பிட்டுள்ளார்.