"இளைய புரட்சித்தலைவியா..? வெட்கக்கேடு"- அண்ணாமலை
செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் ஈகோ பாா்க்காமல் சிபிஐ விசாரணை கோாி முதல்வா் கடிதம் எழுத வேண்டும் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் ஈகோ பாா்க்காமல் சிபிஐ விசாரணை கோாி முதல்வா் கடிதம் எழுத வேண்டும். சிறுமி மாயமாகி 40 நாள் கடந்துவிட்டது, துப்புக் கிடைக்கவில்லை, இந்த விவகாரத்தில் ஈகோ பாா்க்கக்கூடாது. CBI அவா்களாக விசாரணைக்கு வரமுடியாது, தமிழக முதலமைச்சா் தான் கடிதம் எழுத வேண்டும். தமிழகத்தில் தொழில்துறை வளர்க்க ஜப்பான், கொரியானு போகாதீர்கள். கோவை, திருப்பூர் இந்த இடத்தில் மீட்டிங் போடுங்கள். அங்கு இருக்கிற தொழில்துறையை என்கரேஜ் பண்ணுங்கள். அந்நிய முதலீடுகளை நம்பி இருக்காமல் உள்ளூர் தொழிலதிபர்களை உள்நாட்டில் முதலீடு செய்ய வைக்க வேண்டும். நங்கள் பாஜகவின் முகமூடி என்று காங்கிரஸ் சொல்கிறது. எந்த விதத்தில் பாஜகவும் நாங்களும் ஒத்துப்போகிறோம்? அதேபோல நாங்கள் தவெக மற்றும் காங்கிரஸின் B டீமும் அல்ல. நாங்கள் நடுநிலையாக நின்றுகொண்டிருக்கிறோம். புது அரசியலை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசே பிரச்சனையை உண்டாக்க கூடாது. மத நல்லிணக்கத்தை சீர்குலைய விட மாட்டோம் என்று கூறி குலைய வைத்துவிட வேண்டாம். நாளை மலைத்தூணில் தீபம் ஏற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பாகும். இளைய புரட்சித்தலைவியா..? வெட்கக்கேடு..! இது தான் தமிழ்நாடா..? 2014 தேர்தலில் தனித்து நின்ற போது 3 சதவீத ஓட்டு வாங்கியவ மாணிக்கம் தாகூர், 2019 மற்றும் 2024 தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டு வைத்து வென்றார். அன்று தி.மு.க.. இன்று த.வெ.க.. ராகுலுக்கு டீ, காபி வாங்கிக் கொடுக்க, விஜய் வீட்டுக்கு அழைத்து செல்லும் டிராவல் ஏஜெண்ட் தான் மாணிக்கம் தாகூர். ஜனவரியில் இடைத்தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது. நாங்கள் ஏற்கனவே அரசியல் பேச ஆரம்பித்துவிட்டோம். மக்கள் முன்பு சமுதாய பிரச்சனைகள் மற்றும் எங்களுடைய கருத்தை முன் வைக்க ஆரம்பித்துவிட்டோம். நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் நல்ல செய்தி சொல்வோம்" என்றார்.

