"உள்ளாட்சி தேர்தலில் மாஸ்டர் பிளானோடு இறங்கப்போறோம்"- அண்ணாமலை

 
அமித்ஷா, நட்டாவுடன் பூட்டிய அறையில் பேசிய கருத்துகளை வெளியே சொல்ல முடியாது- அண்ணாமலை

விஜய் பத்தி தவறா பேசிட்டாங்க நான் சண்டைப்போட்டேன்... இதனால் உங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லைங்க. அவங்க அவங்க வாழ்க்கைய பார்த்துட்டு அவங்க வாழ்றாங்க என We The Leaders நிறுவனர் அண்ணாமலை கூறியுள்ளார்.


கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய  We The Leaders நிறுவனர் அண்ணாமலை, "உள்ளாட்சி தேர்தலில் மாஸ்டர் பிளானோடு 'வீ த லீடர்ஸ்' களத்தில் இறங்கப்போகிறது. CJP கட்சி தலைவர்களை டெல்லி போலீஸ் நடத்தும் விதம் சரியானது அல்ல, இப்படி செய்தால் இளைஞர்களுக்கு மத்திய அரசு மீது கோவம் தான் வரும். தாராபுரம் தேர்தல் சமயத்தில் நடந்த போராட்டத்திற்காக, தேர்தல் முடிந்த பிறகு தாராபுரம் காவல்துறையினர் கோவைக்கு வந்து, கார்த்திகா அவர்களின் வீட்டிற்குள் புகுந்து கைது செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? அவர் என்ன வெளிநாட்டிற்கா தப்பி ஓடப்போகிறார்? நோட்டீஸ் கொடுத்து, ‘காவல் நிலையத்திற்கு வாருங்கள்' என்று சொல்லக்கூடிய வழக்குதான் இது. இதெல்லாம் ஒன்றும் பெரிய கேஸ் கிடையாது. காவல்துறை ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறுவதை நாம் தடுக்க வேண்டும். வரம்பு மீறிய பிரச்சாரங்கள் தமிழ்நாட்டில் முடிந்துவிட்டன.. தரம் தாழ்ந்த அரசியல் கேடு விளைவிக்கும், கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விஜய் பத்தி தவறா பேசிட்டாங்க நான் சண்டைப்போட்டேன்... இதனால் உங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லைங்க. அவங்க அவங்க வாழ்க்கைய பார்த்துட்டு அவங்க வாழ்றாங்க" என்றார்.