அந்த 18 பேர்... கரூரை சேர்ந்தவர்களுக்கு கோவையில் என்ன வேலை? - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அண்ணாமலை, “40 கேந்திரிய வித்யா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. கேந்திரிய வித்யா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. எல்லா தொகுதிகளிலும் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறேன். இந்த முறை நான் வேட்பாளராக இல்லாத காரணத்தால் கொஞ்சம் நேரம் இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் தேவையோ, அங்கெல்லாம் போவேன். கோவை தெற்கு தொகுதியில் கரூரை சேர்ந்த 18 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். கரூரை சேர்ந்தவர்களுக்கு கோவையில் என்ன வேலை. அமாவாசை காலத்து டெக்னிக்குடன் கோவை தெற்கிற்கு வந்துள்ளார் செந்தில் பாலாஜி.
FCRA சட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ்தான். அதன்பின் சட்டத்தில் சிறுசிறு திருத்தங்களை மட்டுமே பாஜக கொண்டுவந்தது. FCRA சட்டம் கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என்பதுபோல் முதல்வர் பிரச்சாரம் செய்கிறார். காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடக் கூடாதென தி.மு.க.வால் திருமாவளவன் மிரட்டப்பட்டுள்ளார். திருமாவளவன் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. இந்த தேர்தலில் என்னுடைய பங்கு என்ன என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.” என்றார்.

