கூட்டணி குறித்து விஜய் தான் முடிவெடுக்க வேண்டும்- அண்ணாமலை
கூட்டணி குறித்து விஜய் தான் முடிவெடுக்க வேண்டும்- அண்ணாமலை
தவெக தலைவர் விஜய் தனி கொள்கையை வைத்துள்ளார். கூட்டணிக்கு வர வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து விஜய் தான் முடிவெடுக்க வேண்டும் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பிரதமர் நரேந்திர மோதி வருகையால் நாளைமுதல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணி முழுமையாக தொடங்கும். சனாதன தர்மத்திற்கு எதிரான உதயநிதியின் பேச்சு சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது என உயர்நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது இனப்படுகொலைக்கு சமம் என நீதிமன்றம் கண்டித்துள்ளது. உயர்நீதிமன்றம் கண்டித்த பிறகு, துணை முதல்வர் பதவியை உதயநிதி ராஜினாமா செய்திருக்கவேண்டும். உதயநிதி மீது FIR பதிவு செய்திருக்க வேண்டும். தமிழக காவல்துறை தற்போது வரை அவர் மீது வழக்கு பதியாதது ஏன்..? தமிழக அரசு நீதிமன்ற தீர்ப்புகளை மதிப்பது இல்லை,
தவெக தலைவர் விஜய் தனி கொள்கையை வைத்துள்ளார். கூட்டணிக்கு வர வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து விஜய் தான் முடிவெடுக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம் கனவை கேட்டார். தயவு செய்து ஆட்சியைவிட்டு போய்விடுங்கள். இதுதான் என் கனவு என சொல்லிவிட்டேன். தமிழ்நாட்டில் வலிமையாக உருவாகியுள்ள NDA கூட்டணியை பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது. மூழ்கிக்கொண்டிருக்கும் இண்டியா கூட்டணியை மீட்க செல்வபெருந்தகை பணியாற்ற வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் பெரிய தலைவர், பெருமைமிக்க தலைவர், பொறுமையின் உருவமாக இருக்கக்கூடிய தலைவர் சத்திய சோதனைகளை எல்லாம் கடந்து நிற்கக்கூடிய ஒரு தலைவர். அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்று சொல்வார்கள். ஆகையால் ஓபிஎஸ் NDA கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.


