கே.என்.நேரு துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு- ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் அண்ணாமலை

 
s s

கே.என்.நேரு துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.


கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, “கே.என்.நேரு துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக வழக்கு பதிய அமலாகக்த்துறை அறிவுறுத்தியுள்ளது.  கே.என்.நேரு துறையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை 2 முறை கடிதம் அனுப்பியது. அமலாக்கத்துறை 2 கடிதங்கள் எழுதியும் முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவாகவில்லை. கே.என்.நேரு துறையில் நடைபெற்ற 2 முறைகேடுகளில் ரூ.1900 கோடி கைமாறியுள்ளது. ஹவாலா முறையில் வெளிநாட்டிற்கு பணம் அனுப்பிய ஆதாரமும் உள்ளது. கட்சி நிதி என்ற பெயரில் 10 சதவீதம் வரை லஞ்ச பணம் கைமாறியது வாட்ஸ் ஆப் சேட் மூலம் தெரியவந்துள்ளது. ஆதாரம் இருந்தும் ஆளும் திமுக அரசு வழக்கு பதிய மறுக்கிறது.

ஊராட்சி செயலாளர் தேர்வை தொடர்ந்து வெளியிடப்பட்ட பட்டியலில் மிகப்பெரிய அளவில் குளறுபடி நடந்துள்ளது. ஊராட்சி செயலாளர் பணிக்கான நேர்காணல் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் ஊராட்சி செயலாளர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அதிக மதிப்பெண் வாங்கியவர்கள் தகுதி இழந்துள்ளனர். ஊராட்சி செயலாளர் பணிகளுக்கான தேர்வில் கூட லஞ்சம் கைமாறியுள்ளது.” எனக் குற்றஞ்சாட்டினார்.