திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறாது- அண்ணாமலை

 
aNnamalai aNnamalai

டிடிவி தினகரனுடன் நல்ல நட்பில் இருப்பதால் அவருடன் பேசுகிறேன் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “டிடிவி தினகரனுடன் நல்ல நட்பில் இருப்பதால் அவருடன் பேசுகிறேன். வலிமையான கூட்டணியோடு தேர்தலை சந்திப்போம். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறாது.  செங்கோட்டையன் தெரிவிப்பது அவர் கட்சி சார்ந்த கருத்துகள். எங்களை பொறுத்தவரை தே.ஜ. கூட்டணியே வெல்லும். வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம் குறித்து டெல்லியில் நாளை நடைபெறும் ஆலோசனையில் பங்கேற்கிறேன்” என்றார்.