கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது மகிழ்ச்சி- அண்ணாமலை

 
அண்ணாமலை அண்ணாமலை

சிபிஐ விசாரணை கோரியது பாஜக தான் என அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரியது பாஜக தான். கரூர் கூட்டத்தில் மர்ம நபர்கள் கலந்து இருந்தார்களா என விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க உத்தரவிட்டதை வரவேற்கிறோம். கரூர் வழக்கு என்பது கட்சி சம்பந்தப்பட்டதல்ல, 41 உயிர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், கரூர் வழக்கை சிபிஐ விசாரிப்பதில் சீமானுக்கு ஏன் பதற்றம் என தெரியவில்லை. T.R.பாலு தொடுத்த "DMK Files" வழக்கை இனி நானே எடுத்து நடத்த உள்ளேன். 40 ஆண்டு கால திமுகவின் ஊழலை வெளிக்கொண்டு வர இது ஒரு வாய்ப்பு” என்றார்.