கோழைத்தனமான தாக்குதல்- நிச்சயம் அரசு பதிலடி கொடுக்கும்: அண்ணாமலை

 
ச் ச்

பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கும் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, “பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கும். மத்திய அரசு கொடுக்கும் பதிலடி மிகவும் முக்கியமானதாக இருக்கும். பதிலடி கொடுப்பதற்கான பணியில் மத்திய அரசு ஏற்கனவே இறங்கிவிட்டது. அமித்ஷா பதவி விலக வேண்டும் என பேசுபவர்கள் அரசியலுக்காக பேசுகிறார்கள். அப்பாவி மக்களை படுகொலை செய்த இந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு நாம் பயப்பட கூடாது. நாம் எல்லா மதங்களும் ஒன்று என நினைக்கிறோம், ஆனால் தீவிரவாதிகள் அப்படி நினைப்பதில்லை. பிரதமர் வெளிநாடு சென்றிருந்த நேரம் பார்த்து தாக்குதல், இந்த தாக்குதலுக்கெல்லாம் நாம் பயப்பட கூடாது. காஷ்மீர் செல்ல திட்டமிட்டவர்கள், பயணத்தை மாற்றாமல் சென்று வர வேண்டும். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் தமிழக தலைவர்கள் அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும். தீவிரவாதம் வேரறுக்க பட வேண்டும்” என்றார்.