அரசியல் மற்றும் கூட்டணி தொடர்பாகவே அமித்ஷாவின் தமிழக பயணம்- அண்ணாமலை
Apr 10, 2025, 14:48 IST1744276739666

பாஜக மாநிலத் தலைவர் நிகழ்விற்கும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகைக்கும் சம்பந்தமில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகைக்கான காரணத்தை நாளை அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். தமிழக பாஜக புதிய தலைவர் நியமனத்திற்கும் அமித்ஷா வருகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் மற்றும் கூட்டணி தொடர்பாகன பயணமாகவே அமித்ஷா வருகையை பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அமித் ஷா சென்னை வருகிறார்” எனக் கூறினார்.