"மோடி ஐயா சொன்னால் கிணற்றில் கூட குதிப்பேன்"- அண்ணாமலை

 
s s

மாநிலத் தலைவர் பதவியில் இல்லை என்றாலும் மக்களுடன் மக்களாக இணைந்து பணியாற்றுவேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மாநிலத் தலைவர் பதவி இருக்காது என்பதால் வரும் நாட்களில் மக்களுடன் மக்களாக இணைந்து பணியாற்றுவேன். மோடிக்காகவே அரசியலுக்கு வந்தேன். கிணத்துல குதின்னு மோடி அய்யா சொன்னால் குதிக்கிற ஆள் நான். மோடிஜி சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு செய்வது மட்டும்தான் எனது வேலை. மோடி தொண்டனாக இரு என சொன்னால் இருப்பேன். 

இன்னும் சுறுசுறுப்பாக வீரியமாக பாஜக தொண்டர்கள் களத்தில் போராட வேண்டும். மாநில தலைவர் உள்ளிட்ட நிறைய பணிகள் எனக்கு இருக்காது. அமைப்பு ரீதியான பணிகளை வேறொருவர் செய்யட்டும். அது சந்தோஷம். நான் செருப்பை கழற்றி 4 மாதங்கள் ஆகின்றன. காரணம்... திமுக ஆட்சியை தூக்கி எரிய வேண்டுமென எனது செருப்பை தூக்கி எரிந்துவிட்டேன். எனது நேரம் முழுவதும் களத்தில் இருக்க போகிறது. அதிகம் பயணிக்க போகிறேன். களத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். களத்தில் இருப்பேன்” என்றார்.