வக்பு சொத்துகளை திமுகவினர் ஆக்கிரமித்துள்ளனர்- அண்ணாமலை

புதிய பா.ஜ.க மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை எனவும், இன்று, நாளை என சொல்லிக்கொண்டு இருப்பதற்கு பதிலாக நான் போட்டியில் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நாடாளுமன்றத்தில் சரித்திரம் நடந்து இருக்கின்றது, 13 மாற்றங்களுடன் வக்பு மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றபட்டுள்ளது. ஏழை இஸ்லாமியர்களுக்கு இது வரப்பிரசாதம். வக்ப் சொத்தை பராமரிக்க சட்டம் கொண்டு வரப்பட்டு, அது சுதந்திரத்திற்கு பின்பு முறையான போர்டாக 1954 ல் மாற்றப்பட்டு,1995 ல் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது. 2013 ல் சில திருத்தங்களை காங்கிரஸ் கொண்டு வந்தது. அதனை தொடர்த்து இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது
39 லட்சம் ஏக்கர் நிலம் வக்ப் போர்டிடம் இருக்கின்றது. கடந்த 12 ஆண்டுகளில் 21 லட்சம் ஏக்கர் இந்த போர்டில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. அரசு சொத்துக்கள் கூட வக்பு சொத்துக்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் உள்ள தவறுகளை சரி செய்யவும், வக்ப் போர்டில் சியா , சன்னி பிரிவுகள் மட்டும்மின்றி போராகான் உட்பட பிற இஸ்லாமிய சமூகங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் முதல்வர் உட்பட சில கட்சிகள் பொய் சொல்கின்றனர். இஸ்லாம் இல்லாதவர்களை சேர்ப்பதாக சொல்கின்றனர். கிறிஸ்தவ சர்ச் இடங்களை வக்பு போர்டு தங்கள் இடம் என எடுத்து இருக்கின்றனர். இந்த திருத்தம் காரணமாக பெண்களுக்கு பல உதவிகள் கிடைக்கும் வகையில் இந்த வக்பு சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. NDA கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஜெகன்மோகன்,நவீன் பட்நாயக் கட்சிகளை சேர்ந்தவர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்து இருக்கின்றனர்.
இஸ்லாம் மக்களுக்கு எதிரான சட்டம் இது கிடையாது. 39 லட்சம் ஏக்கர் நிலம் மூலம் 126 கோடி வருவாய் வந்துள்ளது. ஆனால் முறையாக நிர்வாகம் செய்யபட வில்லை. முறையாக நிர்வகித்தால் 10 ஆயிரம் கோடி வருவாய் வரும். பாதி இடங்களில் வக்பு சொத்துகளை திமுகவினர் ஆக்கிரமித்து வைத்து இருக்கின்றனர். இந்த மசோதாவை சட்டமாக கொண்டு வந்த மோடிக்கு பா.ஜ.க சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றோம்” என்றார்.