"தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் நான் இல்லை"- அண்ணாமலை

தமிழ்நாட்டின் புதிய பாஜக தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “புதிய மாநிலத் தலைவர் தேர்வான பிறகு நிறைய பேசுவோம். புதிய தலைவர் போட்டியில் நான் இல்லை. தமிழ்நாட்டின் புதிய பாஜக தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை. பாரதிய ஜனதா கட்சியில் தலைவர் பதவிக்கு யாரும் போட்டிப்போடுவதில்லை. எல்லோரும் இணைந்து தலைவரை தேர்ந்தெடுப்போம். தமிழ்நாட்டு மண்ணைவிட்டு எங்கும் போகமாட்டேன். டெல்லி சென்றாலே ஒரே நாள் இரவில் திரும்பி விடுவதே என் பழக்கம். ஒரு தொண்டனாக கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ, அதை அப்படியே செய்வதே என் தலையாய பணியாகும்.
புதிய மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை எனக் கூறினார். பாரதிய ஜனதா நல்ல ஆத்மாக்கள் இருக்கக் கூடிய கட்சி, என்னை பொறுத்த வரை கட்சி மென் மேலும் வளர வேண்டும் என்பது தான். நிறைய பேர் உயிரை கொடுத்து, புண்ணியம் செய்து கட்சியை வளர்த்து இருக்கிறார்கள்.” என்றார்.