'கட்சி நலனைவிட தமிழக நலனே முக்கியம்; என்னால் யாருக்கும் பிரச்னை வராது'- டெல்லி சென்றுவந்த பின் அண்ணாமலை மனமாற்றம்

 
கல்வித் தரத்தை உயர்த்தவே ஆல்-பாஸ் முறை ரத்து: அண்ணாமலை

மாநில தலைவராக எனது கருத்தை கட்சி தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

annamalai

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பியதை தொடர்ந்து பாஜக மாநில தலைவர்  அண்ணாமலையும் டெல்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரை சந்தித்தார். சென்னை திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “மாநில தலைவராக எனது கருத்தை கட்சி தலைவர்களிடம் தெரிவித்துள்ளேன். கட்சி நலனைவிட தமிழக நலனே முக்கியம். 2026 தேர்தலை பொருத்தவரை திமுகவே பாஜகவின் எதிரி. அதை ஆட்சியில் இருந்து அகற்றுவதே நோக்கம். கூட்டணி தொடர்பாக பேச இன்னும் நிறைய காலம் உள்ளது. அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக, தனக்கு தனிப்பட்ட கருத்துக்கள் ஏதும் இல்லை. என்னால் யாருக்கும் பிரச்னை வராது

திமுகவுக்கு எதிரியாக நிற்பது பாஜகதான். அதிகம் கைது செய்யப்பட்டவர்கள் பாஜகவினர்தான். அரசியலில் ஒரு ரவுடியை அடித்தால் தான் இன்னொரு ரவுடியை மக்கள் ரவுடி என ஏற்றுக்கொள்வார்கள். விஜய் அரசியல் புரிதலோடு பேச வேண்டும். விஜய் பேசும் போது அரசியல் புரிதலோடு பேச வேண்டும்” என்றார்.