2026 தேர்தல் களம்... தமிழகத்தில் 5 முனை போட்டி?- அண்ணாமலை பரபப்பு பேட்டி

 
annamalai

பாஜக சார்பில் புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது.  இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன், உள்ளிட்டோரும்,  கூட்டணி கட்சி தலைவர்களான ரவி பச்சமுத்து , ஜான் பாண்டியன், ஏ.சி சண்முகம், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், பாமக பாலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

கல்வித் தரத்தை உயர்த்தவே ஆல்-பாஸ் முறை ரத்து: அண்ணாமலை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழக அரசியல் வரலாற்றில் மிக வித்தியாசமான தேர்தல் களம் இது. வலிமையான கட்சிகள் 4,5 கூட்டணிகளாக உருவாகி இருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான தே.ஜ.கூ, சீமான் மற்றும் விஜய். 5 முனை போட்டி. இந்தியாவில் எங்கேயும் நாம் 5 முனை போட்டியை பார்த்தது இல்லை. எல்லோரும் வலிமையானவர்கள் தான். அண்ணன் சீமான் தனது வாக்கு வங்கியை காட்டி வருகிறார். அண்ணன் விஜய் புதிதாக வந்திருக்கிறார். அவர்களும் நாங்களும் தொடர்ந்து இருக்கிறோம் என்று பெரிதாக பேசுகிறார்கள். 5 முனை போட்டி தமிழகத்திற்கு நல்லதா? எனக்கு தெரியாது. 5 முனை, 3 முனையாக மாற வாய்ப்பு இருக்கிறதா? என்றும் எனக்கு தெரியாது. அடுத்த எட்டு மாத காலத்தில் இந்த ஐந்து முனை எப்படி போகிறது என்று பார்க்கலாம்

நம்மைப் பொறுத்தவரை பரஸ்பரமாக விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்கிறோம். அதே கூட்டணியில் மிக முக்கியம். ‌ சிறிய கட்சி, பெரிய கட்சி என்று நாங்கள் எப்போதும் பார்த்தது கிடையாது. எல்லோரையும் சமமாக நடத்துகிறோம். வருகின்ற காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் பெரிதாகும், விரிவாகும். ஒரே நோக்கம் திமுகவை வீழ்த்த வேண்டும்.  இஃப்தார் நோன்பு பொறுத்தவரை இபிஎஸ், சீமான் என இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்றைக்கு யாரெல்லாம் இருக்கிறார்களோ எல்லோரும் சேர்ந்து  இஃப்தார் நோன்பு நடத்தினோம். நாளை டிடிவி தினகரன் நோன்பு நடத்துகிறார். நானும் கலந்து கொள்ள போகிறேன். இன்றைக்கு யார் நம் கூட்டணியில் இருக்கிறார்களோ பரஸ்பரமாக பேசி நடத்துகிறோம். எல்லோரும் சேர்ந்து ஒரே செய்தியை இஸ்லாமியர்களுக்கு சொல்கிறோம். திமுகவை நம்பாதீர்கள். திமுக செய்த தவறுகளை துரோகங்களை பட்டியலிட்டு காட்டிக் கொண்டிருக்கிறோம். இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் யாரும் அவர்களை வாக்கு வங்கியாக எடுத்துக் கொள்ள முடியாது. பாஜக பொருத்தவரை எந்த ஒரு சிறை தண்டனை பெற்றவரை மதத்தின் அடிப்படையில் இந்து கிறிஸ்டின், முஸ்லிம் இன்று பார்க்கவில்லை நம்மைப் பொறுத்தவரை, மதத்தின் அடிப்படையில் பார்க்காமல் fundamental terrorist தான் பார்ப்போம் என்றும் மதத்தின் அடிப்படையில் சொல்லவில்லை அதற்கான சட்டம் வேறு. சாதாரண குற்றம் செய்தால் அது வேறு. அதன் அடிப்படையில் தான் எல்லா தலைவர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.