“அமித்ஷா- ஈபிஎஸ் சந்திப்பில் அரசியல் கணக்கு எதுவும் இல்லை”- அண்ணாமலை

 
அண்ணாமலை

பாஜக சார்பில் புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது.  இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன், உள்ளிட்டோரும்,  கூட்டணி கட்சி தலைவர்களான ரவி பச்சமுத்து , ஜான் பாண்டியன், ஏ.சி சண்முகம், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், பாமக பாலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

annamalai

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அரசியல் தலைவர்களாக இருந்தாலும் யாராக இருந்தாலும் உள்துறை அமைச்சரை சந்திக்கலாம். அரசியல் ரீதியாக இந்த நேரத்தில் முடிச்சு போட்டு கேள்வி கேட்டால் என்னால் பதில் சொல்ல கூடிய நிலைமையில் இல்லை. உள்துறை அமைச்சர் சந்திக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டால் கொடுக்கிறார்கள், பார்க்கிறார்கள். இன்றைக்கு நான் சொன்னால் தவறாக போய்விடும். அதிகாரப்பூர்வமாக உள்துறை அமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அரசியல் கணக்கு எதுவும் இல்லை.... எங்கள் நோக்கம் அது இல்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பாக வளர்ந்து வருகிறது. 

எல்லோருடைய நோக்கமும் திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். நாம் யாரையும் வேண்டாம் என்று சொல்லப் போவதில்லை. அதிகாரப்பூர்வமாக யார் வேண்டுமானாலும் உள்துறை அமைச்சரை சந்திக்கலாம். துறை அமைச்சர் அவர்களை வேண்டாம் என்று சொல்லப் போவதில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் எல்லா தலைவர்களும், வர முடியாத தலைவர்களும் பிரதிநிதிகளை அனுப்பி இருக்கிறார்கள்.‌ ஒரே மேடையில் அத்தனை பேரையும் சிறப்பாக நோன்பை நடத்திக் காட்டி இருக்கிறோம். இஸ்லாமிய சொந்தங்களோடு தொடர்ந்து பாஜக எப்போது இருக்கும்” என்றார்.