டாஸ்மாக் முறைகேடு குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்- அண்ணாமலை

 
அண்ணாமலை

டாஸ்மாக் முறைகேடு விவகாரம் வரும் நாட்களில் பூதாகரமாக வெடிக்கும், இவ்விவகாரத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணாமலை

டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்திய சோதனை அடிப்படையில் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “டாஸ்மாக் முறைகேடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். டாஸ்மாக் முறைகேடு விவகாரம் வரும் நாட்களில் பூதாகரமாக வெடிக்கும், இவ்விவகாரத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும். இப்போது தான் அந்த அமைச்சர் ஜெயிலுக்கு போயிட்டு வந்தார், வந்தபிறகு மீண்டும் இதுபோன்று முறைகேடு நடந்துள்ளது.  டாஸ்மாக் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். டாஸ்மாக் முறைகேடுகளை மறைக்கவே தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும். போராட்டம் குறித்த அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும்” என்றார்.