இப்தார் நோன்பு நிகழ்ச்சி- விஜய்க்கு வேண்டுகோள் வைத்த அண்ணாமலை

 
ச்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ஒன்றிய உள்துறை அமைச்சர் சி.ஐ.எஸ்.எப் நிகழ்வில் பங்கேற்றார். 

அண்ணாமலை

மத்திய ஆயுதமேந்திய காவல்துறை பயிற்சி மையத்துக்கு, ராஜ ஆதித்ய சோழன் என்ற பெயரை உள்துறை அமைச்சர் சூட்டி இருக்கிறார். ராஜ ஆதித்ய சோழன் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு யானை மீது அமர்ந்து வீர மரணம் அடைந்தவர். இதற்காக நன்றி கூறுகிறோம்! தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அமித்ஷா மீது ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற கல்விகளை  தாய் மொழியில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார். இரண்டாவது முறையாக இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார். இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என அமித்ஷா சொல்லி இருக்கிறார். அமித்ஷாவை வரவேற்க ஒட்டப்பட்டதாக வைரலாகும் போஸ்டருக்கும் பாஜகவிற்கும் இந்த சம்பந்தமும் இல்லை. இது வழக்கம் போல திமுகவினர் செய்தது. பாஜக போஸ்டர் தயார் செய்வதற்கு சில வழிமுறைகள் உள்ளது. இது பாஜகவின் போஸ்டர் அல்ல. இது யார் ஒட்டியது என்பது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும். 

தவெக வினர் சிஆர்பிஎப் போலீசாரை வெளியே நிற்க வைத்துவிட்டு, நிகழ்ச்சி நடத்தக் கூடாது. இந்திய அரசு கொடுத்துள்ள வீரர்களை சிறுமைப்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். அதை தாண்டி உங்களுக்கு என்ன பாதுகாப்பு வேண்டுமோ அதை வைத்துக் கொள்ளுங்கள். பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, பாஜகவால் தோற்றம் என சொல்லி இருக்கக்கூடிய நிலையில் பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கி இருக்கிறோம். எந்த கட்சியையும் சிறுமைப்படுத்தவோ எந்த தலைவரையும் சிறுமைப்படுத்தவோ விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் முதலமைச்சர் என்பதை பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்” என்றார்.