"பாஜக கூட்டணிக்காக அதிமுகவினர் தவம் இருக்கிறார்கள்"- அண்ணாமலை

பாஜகவால்தான் தோற்றோம் எனக் கூறியவர்கள் தற்போது பாஜக கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பாஜகவை தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, பாஜகவால்தான் தோற்றோம் எனக் கூறியவர்கள் தற்போது பாஜக கூட்டணிக்காக தவல் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இக்கட்டான சூழலில் வந்த டிடிவி தினகரனை இப்போது எப்படி கழற்றிவிட முடியும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி பலமாகி கொண்டு இருக்கிறது. உதயநிதி நடத்திய நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் என்னவானது? முதல்வர் பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் மும்மொழி கொள்கைக்கு கொடுக்கும் ஆதரவை கண்டு திமுகவுக்கு எரிச்சல்.
டெக்னிக்கல் புத்தகங்கல் தமிழில் இருக்க வேண்டும். அமித்ஷா கூறியதுபோல் மருத்துவ படிப்பை தமிழில் கற்பிக்க வேண்டும். மருத்துவ படிப்பை தமிழில் கற்பிக்க அமித்ஷா சொன்னாலும் துரைமுருகனுக்கு பிடித்திருக்க வாய்ப்பில்லை. துரைமுருகன் பேசுவது சரியான விவாதம் அல்ல. சந்தான பாரதி புகைப்படம் இடம் பெற்றிருப்பது திமுகவினரின் வேலை. பாஜக போஸ்டரில் பிரதமர் மோடி, தேசிய தலைவர்களின் புகைப்படம் மட்டும்தான் இருக்கும்” என்றார்.