2 நாட்களில் அமித்ஷா வருகிறார்... பல அரசியல் மாற்றங்கள் நிகழப்போகிறது- அண்ணாமலை
Mar 4, 2025, 15:57 IST1741084033101

கூட்டணி குறித்து அவசரத்தில் பேசினால் தப்பா போயிடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற கள் விடுதலை இயக்க கருத்துரங்கத்தில் பங்கேற்ற பின் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அமித்ஷா இன்னும் 2 நாட்களில் தமிழகம் மீண்டும் வரவுள்ளார். அவர் வரும்போது பல அரசியல் மாற்றங்கள் நிகழும். தேர்தல் கூட்டணி குறித்து அவசர கதியில் இப்போது எதையும் சொல்ல முடியாது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி வழங்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி வேலுமணி வீட்டு ரிசப்ஷனுக்கு வருவார் என நினைக்கிறேன்” என்றார்.