"இதை செய்ததற்கு பிரசாந்த் கிஷோரை எப்போதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்"- அண்ணாமலை

 
 அண்ணாமலை

ஏண்ணே திமுகவ  ஆட்சில உட்கார வச்சீங்க... இதை செய்ததற்கு உங்களை எப்போதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாந்த் கிஷோரை சாடினார்.

கல்வித் தரத்தை உயர்த்தவே ஆல்-பாஸ் முறை ரத்து: அண்ணாமலை


கோவையில் பாஜக அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். அதன் பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பிரசாந்த் கிஷோர் குறித்த கேள்விக்கு,  “பீகாரில் இருந்து ஒருவர் வருகிறார். அவருக்கு தமிழ்நாட்டில் ஒரு பெயர் கிடைக்கிறது என்றால் சந்தோஷமான விஷயம் தான். தமிழர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்பவர்கள் தானே. தமிழ்நாட்டிற்கு நல்லது யார் செய்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்வோம். பிரசாந்த் கிஷோரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், இவ்வளவு செய்து ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் கொண்டு வந்து உட்கார வைத்தீர்கள் ?. அதற்காகவே மக்கள் எப்பொழுதும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் உங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழகம் நன்றாக இருக்க வேண்டும் என இந்தியாவில் இருந்து யார் எந்த வேலை செய்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். 

உதாரணமாக, கிரிக்கெட் விளையாட்டு வீரர் தோனியை எடுத்துக் கொண்டால் மொழி தெரியாமல் வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ்க்காக விளையாடினார், அவரை அனைவரும் அவர் வீட்டுப் பிள்ளையாகவே ஏற்றுக் கொண்டனர். அதே போல நல்லது செய்தால் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்” என்று கூறினார்.