விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு ஏன்?- அண்ணாமலை விளக்கம்

நடிகர் விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “எல்லா கட்சியினரையும் போல தான் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. யாராக இருந்தாலும் மத்திய அரசு கண்காணித்து பாதுகாப்பு வழங்கியிருக்கிறது. அச்சுறுத்தல் இருக்கிறது என தகவல் வந்ததன் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு சார்ந்தவரா? சாராத நபரா? என்பதெல்லாம் விஷயமல்ல. எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கும் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கியிருக்கிறது. விஜய்யால் ஆளுநரை சந்திக்க வர முடியவில்லை.
பரந்தூர் மக்களை சந்திக்க செல்ல முடியவில்லை. மாநில அரசு ஏன் விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை. வரும் 2026- இல் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும். பாஜக ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அரை நூற்றாண்டு ஆனாலும் செய்து முடிக்கும். தமிழகத்தில் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. மக்களின் உயிர், உடமையை காத்தவர் மோடி. 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் வந்ததைப்போல் 2026- இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி. 2026- ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வேரோடு பிடுங்கி எறியப்படும். எவ்வளவு பெரிய எதிரியாக இருந்தாலும் வீழ்த்தும் வல்லமை பாரதிய ஜனதாவுக்கு உண்டு” என்றார்.