"வேங்கை வயல் விவகாரத்தில் கதை, திரைக்கதை,வசனம்"- அண்ணாமலை பரபரப்பு பேட்டி

 
annamalai

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தில், காமராஜர் கலாம் அறக்கட்டளை  சார்பில் திருக்குறள் உலக சாதனை விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார 37 பள்ளிகளை சேர்ந்த 1330 மாணவ மாணவிகள் 1330 குறள்களை கூறி உலகசாதனையில் பங்கேற்றனர். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றி நினைவு பரிசுகள் வழங்கினார்.

அண்ணாமலை

      
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கட்சியில் அனைவரும் சகோதர சகோதரிகள் தான். வானதி சீனிவாசனாக இருக்கட்டும், நயினார் நாகேந்திரனாக இருக்கட்டும். அனைவருக்கும் பாஜக வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதே நோக்கம். ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறோம், பெயரை விட்டு டிவீட் செய்வதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. திமுக என்றாலே நாடக கம்பெனி. வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எழுதியுள்ள வசனம், திரைக்கதை  கருணாநிதி எழுதுவதை மிஞ்சும் அளவிற்கு உள்ளது. இத்தனை நாட்கள் இல்லாத ஆடியோ, வீடியோ வெளியே வருகிறது. உண்மையாகவும், வெளிப்படையாகவும் திமுக உள்ள நிலையில் ஏன் சிபிஐ விசாரணையை தடுக்கிறீர்கள்? கூட்டணி கட்சிகளே இதனை ஒப்புக்கொள்ளவில்லை.

திமுக அமைச்சராக இருக்க பொய் சொல்ல வேண்டும். ஆர்எஸ்எஸ் தான் காந்தியை கொன்றார்கள் என்று சொல்வதை பெரிது படுத்தவில்லை. திருப்பூர் அரசு நிகழ்வில் கரு. பழனியப்பன் ஆர்எஸ்எஸ் குறித்து பேசியதற்கு சர்ச்சை குறித்து பேசினால் மீடியாவில் பெரிதாகும். அதன் மூலம் இடம் கிடைக்கும் என நம்புகிறார்கள்” என்று கூறினார்.