சென்னை மெட்ரோவிற்கு ரூ.43,000 கோடி வாங்கி கொடுத்துள்ளோம்- அண்ணாமலை

 
அண்ணாமலை

கோவிலுக்கு செல்லக்கூடிய எண்ணிக்கை அதிகரித்துள்ளது உண்டியல் வசூல் அதிகரித்து இருக்கக்கூடிய நிலையில், அடிப்படை வசதிகள் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

எங்கள் எண்ணம் பிரதான எதிர்க்கட்சியாக வருவதல்ல''-அண்ணாமலை பேட்டி! |  nakkheeran

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி இந்தியாவில் அவருடைய துறையில் பெரிய நிபுணர். அவருக்கு அவர் சார்ந்து இருக்கக்கூடிய மதத்தின் மீது பற்று இருக்கிறது, அதில் தவறு கிடையாது. மார்கழி மாதத்தில் பாராயணம் பாடுவது தவறு கிடையாது, பசுமாட்டின் மீது நம்பிக்கை இருக்கிறது தவறு கிடையாது, அது அவருடைய கோட்பாடு. இதனை வகுப்பறையில் மாணவர்களிடம் அவர் சொல்வது கிடையாது. அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு, அதை குறை கூறக்கூடாது. ஒரு கருத்தை மட்டும் பிரதானப்படுத்தி அதை அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றி தெரியும்,  அவருடைய சாதனையை தெரியும். காமகோடி ஏஐ தொழில்நுட்பத்தில் சிறந்த பேராசிரியராக இருந்து வருகிறார். 2026 எத்தனை அமாவாசை இருக்கின்றது? என்று கணக்கு செய்து கொள்ளுங்கள். எத்தனை பௌர்ணமி இருக்கிறது என்பதை எண்ணிக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு இந்த ஆட்சி இருக்காது. 

முதல்வர் இந்த மீனாட்சி கோவில் வாசல் பகுதியில் நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்டால் தான் தற்போதைய நிலை தெரியும், ஒரு சமுதாயத்தினுடைய ஓட்டு வேண்டும் என்பதற்காகத்தான் பாஜகவுடன் அதிமுகவினர் கூட்டணி வைத்தனர். நாம் நாமாக இருந்தால் இந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்கள் அனைவருமே ஆதரவு தருவார்கள். கொள்கை ரீதியாக அரசியலை நாங்கள் முன்னெடுத்து இருக்கின்றோம். அறநிலையத்துறை அகற்றுவோம் என்கின்ற நிலையை எத்தனை கட்சிகள் ஏற்றுக்கொள்ளும்?

அவர்களுக்கு அம்பேத்கர் என்பவர் வியாபார பொருள் மட்டும்தான்” - அண்ணாமலை பேட்டி!  | nakkheeran


எங்களைப் பொறுத்தவரை ஒரு தனி பாதையில் தேசிய ஜனநாயக கூட்டணி பயணம் செய்ய ஆரம்பித்து இருக்கிறது.  மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வரும் பட்ஜெட்டில் மத்திய அரசு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யும்.  அனைத்து அமைச்சர்களுக்கும் செலக்டிவ் அம்னீசியா நோய் வந்துவிட்டதோ என பயமாய் இருக்கிறது. இவர்களுடைய ஆட்சியின் அவலத்தை மறைப்பதற்காக மத்திய அரசை குறை சொல்லி வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளோம் என்று முப்பத்தாறு பக்க வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற தேர்தலின்போது தாக்கல் செய்துள்ளோம். 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி ரூபாய் நிதி அளித்துள்ளோம். சென்னை மெட்ரோவிற்கு ரூ.43 ஆயிரம் கோடி வாங்கி கொடுத்துள்ளோம்” என்றார்.