இந்த போட்டோவை எடுத்தது யாரு..? FIR போட்டு உள்ளே தள்ளுங்க... அண்ணாமலை ஆவேசம்!
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யும், நடிகை த்ரிஷாவும் சமீபத்தில் கோவாவில் நடந்த கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு, ஒரே பிரைவேட் விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பேசும்பொருளானது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “விஜய் இன்று அரசியலுக்கு வந்துள்ளார். கடந்த வாரம் விஜய், கோவாவிற்கு சென்றார். விமான நிலையத்தில் அவர் சோதனைகுள்ளாக்கப்படும்போது, அவரது பிரைவேட் போட்டோ வெளியே வந்துள்ளது. அது எப்படி வெளியே வந்தது? விஜய் யாருடன் வேண்டுமானாலும் தனி விமானத்தில் செல்லலாம். விஜயுடன் யாருடன் வேண்டுமானாலும் செல்லலாம் அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அந்த போட்டோவை எடுத்தது யாரு.? போரவங்க, வரவங்களை போட்டோ எடுப்பதுதான் ஸ்டேட் இண்டெலிஜெண்ட் வேலையா? போட்டோ எடுத்து ஐடி விங்கிற்கு கொடுப்பதுதான் அவர்கள் வேலையா? ஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. இதுதான் திமுகவின் அரசியல் நாகரீகம், இதுதான் திமுக மக்களை மதிக்கின்ற லட்சணமா?
மத்திய விமானத்துறை அமைச்சருக்கு தமிழக பாஜக கடிதம் எழுதியுள்ளது. சிசிடிவியை ஆராய்ந்து யார் போட்டோ எடுத்தது என கண்டுபிடித்து கைது செய்யுங்கள்! FIR போட்டு உள்ளே தள்ளுங்கள். தி.மு.க.வை எதிர்த்தால் அவர்களுக்கு கிடைக்கும் பட்டப்பெயர் சங்கி. யார் அவர்களை எதிர்த்தாலும் பா.ஜ.க.வின் B டீம், C டீம் என்கிறார்கள்.. சீமானே சொல்லி இருக்கிறார் சங்கி என்றால் நண்பன் என்று! தவெக தலைவர் விஜய் திரைத்துறையில் பிஸியாக இருந்ததால், பிரதமர் மோடியின் அரசியலை உற்று நோக்கினாரா என்பது தெரியவில்லை,அம்பேத்கரின் வழியில் அரசியல் செய்து, நாட்டு மக்களுக்கு நல்லது செய்தது யார் என்பதை அவர் சுட்டிக்காட்ட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.