ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவினருக்கு தொடர்பா?- அண்ணாமலை விளக்கம்

 
அண்ணாமலை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஆரூத்ரா கோல்ட் நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளாதா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியிருந்தார்.

 அண்ணாமலை

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டில் காவல்துறை அடிப்படை பணிகளை வலுவாக்க வேண்டும். தோட்டாக்கள் மூலம் குற்றவாளிகளை அடக்க நினைத்தால் மீண்டும் குற்றவாளிகள் உருவாகுவார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கிறது என செல்வப் பெருந்தகை கூறுகிறார். செல்வப் பெருந்தகை ஒரு முன்னாள் குற்ற பதிவேட்டில் இருந்தவர் என்பதால் அவருக்கு இது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எனக்கு அது குறித்து தெரியவில்லை..அப்படி இருந்தால் அவர்களுக்கு பாஜகவில் இடம் இல்லை.

பாஜகவின் பதிவேட்டில் எந்த மாவட்ட தலைவரும் குற்றவாளியாக, ரவுடிகளாக இல்லை, அப்படி இருந்தால் சொல்லுங்கள். இதற்கான மூளை, யார் இதை திட்டம் போட்டது? ஒவ்வொரு தலைவரையும் கண்காணிக்க நுண்ணறிவு பிரிவு இருக்கும் அவர்களெல்லாம் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? பின்னால் இருந்து இயக்கிய கருவியை கண்டுபிடிக்க வேண்டும்...வெறுமனே 6 பேர் சரணடைந்து விட்டார்கள் என்று விட்டுவிட கூடாது. மாயாவதி கூறியது போல தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது. இதில் அரசியல் இல்லை எனவே இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விசாரணையை சி பி ஐ க்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் தலித் சமுதாயத்தின் மீது வன்கொடுமை மற்றும் கொலை சம்பவங்கள் அதிகமாகி உள்ளது.

அண்ணாமலை

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 8 முதல் 9 கொலைகள் நடைபெறுகின்ன. பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தமிழகத்தில் பாஜகவில் வளர்ந்து வரும் பட்டியல் தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதனை காவல்துறை முன்பகை எனக் கூறி முடிக்க பார்க்கிறது. முதலமைச்சர் காவல்துறையை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்... காவல்துறையில் அடிப்படை பணிகளை வலுப்படுத்த வேண்டும்...ஆருத்ரா விவகாரத்திலும் அது தொடர்பாக ஆம்ஸ்டிராங் கொலை வழக்கிலும் பாஜகவினர் தொடர்பு உள்ளதாக எழும் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது.. ஆருத்ரா விவகாரத்தில் பாஜகவினரு தொடர்பு இருந்தால் 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.