பூரண மது விலக்கு சாத்தியம் இல்லை; கள்ளுக்கடையை திறங்க- அண்ணாமலை

 
அண்ணாமலை

தமிழகத்தில் பூரண மது விலக்கு சாத்தியம் இல்லை, கள்ளுக்கடை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

விஜய்யின் நல்ல தலைவர்கள் பேச்சு டு துரைமுருகனின் டாஸ்மாக் கமெண்ட்!” -  அண்ணாமலை பதிலென்ன?! | Annamalai press meet in covai regarding tasmac and  vijay speech - Vikatan

கோவை அவினாசி சாலை முதலிபாளையம் பகுதியில் பாஜக கோவை பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “சுதந்திரமாக இயங்கக்கூடிய சிஏஜி மாநில அரசு இயங்கக்கூடிய டாஸ்மாக் நிறுவனம் எப்படி இயங்குகிறது. அதன் வெளிப்படைத்தன்மை அதன் கணக்கு வழக்கு முறை எந்த அளவிற்கு வெளிப்படுத்தன்மையாக உள்ளது என்பது குறித்து சிஏஜி எப்போதுமே தணிக்கை செய்வார்கள். குறிப்பாக தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தை தணிக்கை செய்த அவர்கள் மேலோட்டமாக கணக்கு வழக்குகளில் படைத்தன்மையாக இல்லை எனக் கூறி இருக்கிறார்கள். டாஸ்மாக் நிறுவனத்தில் ஆண்டறிக்கையை கஷ்டப்பட்டு தெரிந்தால் மட்டுமே கிடைக்கும். தமிழக அரசு டாஸ்மாக்கை பொறுத்தவரை அங்குள்ள பல விஷயங்களை மறைக்க வேண்டும் என நினைக்கிறது. 

ஏழைகள் உயிர் திமுகவுக்கு இளக்காரமா? - கே.பி.பார்க் விவகாரத்தை  சுட்டிக்காட்டி அண்ணாமலை கேள்வி | Annamalai question referring to KP Park  issue - hindutamil.in

நீர்வளத்துறை துரைமுருகன் அண்ணன் சொன்னதை காமெடியாக சொன்னாலும்.. நான் கள்ளக்குறிச்சிக்கு போகும் போது எங்களிடம் சிலர் சொன்னார்கள்.. உண்மையில் கள்ளக்குறிச்சியிலும் சொன்னார்கள். இன்று டாஸ்மாக்கின் தரம் தண்ணீரை போன்று விற்கிறார்கள் என்று கூறினார்கள். அதில் தரம் இல்லை யாரும் சென்று ஆய்வு நடத்துவது இல்லை. போதை அதிகமாக வேண்டும் என்பதற்காக தான் கள்ளச்சாராயம் அபின் மற்றும் கஞ்சாவை நோக்கி சென்று இருக்கிறார்கள் என்று கள்ளக்குறிச்சியில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். துரைமுருகன் நகைச்சுவையாக சொல்லியிருந்தாலும் அது உண்மை. டாஸ்மாக் மதுபானம் தரமானதாக இல்லை, `கிக் இல்லை' என அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான். சிஸ்டத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதை அவரை ஒப்புக் கொண்டுள்ளார். அரசு  தவறாக வேலை செய்கிறது என்று நகைச்சுவையாக அவர் சொன்னார் என்கிறார்கள். ஆனால் இதை நகைச்சுவையாக கடந்து செல்லக் கூடாது. தமிழகத்தில் பூரண மது விலக்கு சாத்தியம் இல்லை, கள்ளுக்கடை திறக்க அனுமதி வழங்க வேண்டும்” என கூறினார்.