டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என அமைச்சர் சொல்வது உண்மைதான்- அண்ணாமலை

 
அண்ணாமலை

அடுத்த வரும் தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டும், அதை தான் செய்துவருகிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜகவை வளர்த்து கொடுத்துவிட்டு செல்வது என் கடமை'-அண்ணாமலை பேட்டி |  nakkheeran

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்வது தவறு இல்லை. வெளிநாடு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சென்னையில் சுகாதாரம் மோசமாக உள்ளது. அடிப்படை சுகாதாரம் அதளபாதாளத்தில் உள்ளது. டாஸ்மாக் மது குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறியது உண்மைதான். இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு. டாஸ்மாக் மதுபானத்தின் தரம் குறைவு காரணமாகவே சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளை நாடுகின்றனர். 

ஈஷாவை பொறுத்தவரை யானை வழித்தடம் இல்லை. 1994ல் கள்ள சாராய வழக்கில் குண்டர் சட்டத்தில் ஜெயிலுக்கு போனவர்தான் இன்றைய தமிழக அமைச்சர் ஆர்.காந்தி. அடுத்த வரும் தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டும்” என்றார்.