அப்பாவி ஆட்டை வெட்ட வேண்டாம். கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள்- அண்ணாமலை

 
அண்ணாமலை

அப்பாவி ஆட்டை வெட்ட வேண்டாம், திமுகவினர் கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

Image


கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “கோவையில் 3வது முறையாக சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. இதன்மூலம் மக்கள் அதிமுகவை நிராகரித்துள்ளனர் என்பது தெரிகிறது. பாஜகவிற்கு காலம் வரும் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம். தனியாக போட்டியிடும் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. எஸ்டிபிஐ போன்ற கட்சியோடு கூட்டணி வைத்தால் இதுதான் நிலை என்று மக்கள் காட்டிவிட்டார்கள். இதுவரை கோவையில் அதிமுக டெபாசிட் இழந்திருக்கிறதா? 6 சட்டமன்ற தொகுதிகளில் 3ல் அதிமுக டெபாசிட் இழந்திருக்கிறது.

ஒரு கட்சி என்பது குழந்தையை போன்றது. முதலில் தவழ்ந்து சென்று பின்னர் எழுந்து நிற்கும். அதுபோலவே பாஜக தமிழ்நாட்டில் படிப்படியாக முன்னேறி வருகிறது. ஆடுகளை வெட்டாமல் திமுகவினர் என்மீது கை வையுங்கள், அப்பாவி ஆடுகளை துன்புறுத்த வேண்டாம்.