அணையப்போகும் விளக்கு அதிமுக- அண்ணாமலை

 
அண்ணாமலை

அதிமுக அணையப்போகிற விளக்கு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அதிமுக அணையப்போகிற விளக்கு, அதனால் பிரகாசமாக எரிவதுபோல் விமர்சனம் செய்கின்றனர். ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக எங்கு இருக்கப் போகிறது என்பதை பார்க்கத்தான் போகிறோம். தனியார் அமைப்பின் அழைப்பின்பேரில் திய்னம் செய்ய பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்ததை அரசியலாக்கக் கூடாது. ஜூன் 4 ஆம் தேதி தமிழகத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது, எந்த கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை பார்க்கலாம். மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்திருக்கின்றனர் என நம்புகிறேன்.

பிரதமர் மோடி குமரி முனையில் விவேகானந்தர் பாறையில் மோடி தியானத்தில் ஈடுபடவுள்ளார். பிரதமரின் தனிப்பட்ட நிகழ்ச்சி. ஆகவே கட்சி சார்பில் யாரும் அவரை வரவேற்க செல்லவில்லை. சொந்த நிகழ்வாக பிரதமர் அங்கு சென்றுள்ளார். மோடியின் குமரி வருகைக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. இந்துத்துவா யாருக்கும் எதிரி கிடையாது” என்றார்.