பிரகாஷ் ராஜ் அரசியல் அனுபவம் இல்லாதவர்; மோடியை திட்டுவதுதான் அவரது வேலை- அண்ணாமலை

 
Annamalai

பாஜகவை பற்றி பேசுவதற்கு, அரசியல் அனுபவம் இல்லாதவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai

சென்னையில் பாஜக நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பாஜகவை பற்றி பேசுவதற்கு, அரசியல் அனுபவம் இல்லாதவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ். பிரதமர் நரேந்திர மோடியை திட்டுவதை மட்டுமே வேலையாக வைத்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். பெங்களூரு சென்டரல் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர் பிரகாஷ் ராஜ். அவருக்கு அந்தளவுதான் அரசியல் அனுபவம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இம்முறையும் பாஜக வெற்றி பெறும். மீண்டும் சொல்கிறேன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு  தீவிரமான இந்துத்துவவாதி. திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் கருத்துரிமையை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. எத்தனை இடங்களில் வெற்றி என்பது முக்கியமல்ல, எவ்வளவு வாக்கு என்பதே முக்கியம்.

Image

நாடாளுமன்றத் தேர்தல் பணி செய்யாதவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றவர்கள் அனைவரும் கட்சிக்காக உழைத்தவர்கள். தேர்தல் முடிவுக்கு பின் மேலே இருப்பவர்கள் கீழேயும் கீழே இருப்பவர்கள் மேலேயும் வரலாம்” என்றார்.