மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு தடுத்துவருகிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு

 
அண்ணாமலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றும் இன்றும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்தில் ஈடுபட்டுவருகிறார். 

இந்நிலையில் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பாஜக மாநிலம் முழுவதும் தேர்தல் பணிக்குழு செயல்பட துவங்கியுள்ளது. நாங்கள் யாரிடம் கூட்டணி வைக்கப் போகிறோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம். நேரம் வரும் போது அறிவிக்கிறோம், பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்திற்கு திமுக அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது, வங்கியில் பணம் போடுவதில் பிரச்னை உள்ளது. தமிழகத்தில் பிரதமர் கிசான் திட்டத்தில் பயன்பெற்றுவந்த விவசாயிகள் 6 லட்சம் பேரை சரியில்லை என்று திமுக அரசு நீக்கியுள்ளது, எவ்வளவுதான் மத்திய அரசு திட்டமாக இருந்தாலும் அதை மாநில அரசைகொண்டுதான் நிறைவேற்றவேண்டியுள்ளது. 100 நாள் திட்டத்திற்கான மத்தியஅரசின் நிதி அனைத்தும் தீபாவளிக்கு முன்பாக பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. மத்திய அரசு திட்டங்களை திமுக அரசு தலைகீழாக நின்று தடுத்து வருகிறது.

அண்ணாமலை

ஸ்டாக் மார்க்கெட்டில் இந்தியா உலக அளவில் 5வது இடத்திற்கு வந்துள்ளது, பெரிய நிறுவனங்கள் ஈடுபட்டுவந்த பங்கு வர்த்தகத்தில் நடுத்தர வர்க்கத்தினரும் ஈடுபடுவதால் இந்த முன்னேற்றம். மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிர் காப்பீடு சரியாக வழங்கவில்லை என்றால் தாசில்தார் சரியான சான்று வழங்காததுதான் இதற்குக் காரணம். உலக மக்கள் தொகையில் இந்தியா மிகப்பெரிய நாடு ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராக்கவேண்டும் என்று எலன்மஸ்க் மற்றும் டெக்ஸ்லா நிறுவன சிஇஓ கேட்டுக் கொண்டுள்ளனர், இதைதான் நம்முடையை அரசும் வலியுறுத்திக் கொண்டு இருக்கிறது, நிச்சயம் நடக்கும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, இன்றைய நிலையில் ஐநா சபை என்பது உலகத்தின் தன்மையை எதிரொலிக்காமல் 1950ல் துவக்கப்பட்ட ஓல்டு மேன்ஸ் கிளப் போல் செயல்படுகிறது, ஐநா சபை சீர்திருத்தப்பட்டால் நிச்சயம் இந்தியா ஐநாவில் நிரந்தர உறுப்பினராகும்” என்றார்.