கொக்கு மீன் பிடிக்க காத்திருப்பது போல் 2026 தேர்தலில் பாஜக வெற்றி பெற காத்திருக்கிறது- அண்ணாமலை

 
அண்ணாமலை

பாஜகவை கொக்குடன் ஒப்பிட்டு விமர்சிக்கும் தலைவர்களுக்கு கொக்கு போல பொறுமை வேண்டும், கொக்கைப் போல காத்திருந்து மீன் பிடிக்கும் திறன் பாஜகவுக்கு உண்டு என்பது 2026ல் தெரியவரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

பாஜகவை வளர்த்து கொடுத்துவிட்டு செல்வது என் கடமை'-அண்ணாமலை பேட்டி |  nakkheeran

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் பெருங்கோட்டப் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, “'என் மண் என் மக்கள் ' யாத்திரை 103 தொகுதியை கடந்துள்ளது. 15-ம் தேதி முதல் மீண்டும் யாத்திரை தொடங்கும். யாத்திரை மூலம் பெரிய அனுபவம் கிடைத்துள்ளது , கட்சி சாராத பலர் பங்கேற்கின்றனர். ஜனவரி இறுதிக்குள் யாத்திரையை முடிக்க திட்டமிட்டுள்ளேன் . யாத்திரை மூலம் சாமானிய மனிதர்களின் தேவை என்ன என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. திராவிட மாடல் அரசின் சமூக அநீதியை பார்க்க முடிகிறது.

நாங்குநேரி சம்பவம் , வேங்கைவயல் போன்ற இடங்களில் மக்கள் கேள்வி கேட்கின்றனர் , 300 நாட்கள் ஆன பிறகும் வேங்கைவயல் சம்பவத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. பெரம்பலூரில் கல்குவாரி ஒப்பந்தத்தில் பங்கேற்ற பட்டியலினத்தை சேர்ந்த பாஜக பிரமுகரை ஆட்சியர் முன்பு நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை. 

நாட்டில் இ.டிக்கு இருக்கும் அதிகாரம் ஐ.டிக்கு இல்லை'' - பாஜக அண்ணாமலை  பேட்டி | nakkheeran

கொக்கு மீன் என எங்களை  சில அரசியல்கட்சி தலைவர்கள் சொல்கின்றனர். அவர்களுக்கு கொக்கு போல பொறுமை இருந்திருந்தால் அந்தந்த கட்சிகள் இப்போது எங்கு நிற்கிறார்களோ அங்கு நிற்க வேண்டிய  நிலைமை வந்திருக்காது. கொக்குக்கு இருக்கும் பொறுமை அந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு இருக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். காத்திருந்து மீன்பிடிக்கும் திறன் பாஜக எனும் கொக்குவுக்கு உண்டு. அது 2026 ல் தெரியும். எங்களுக்கான நேரம் 2026 தான்” என்றார்.