தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பெரியார் சிலைகள் அப்புறப்படுத்தப்படும்- அண்ணாமலை

 
K Annamalai

மிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீரங்கம் கோயிலின் முன்பாக வைக்கப்பட்டுள்ள "கடவுளை நம்புபவன் முட்டாள்" எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ள பலகை மற்றும் கம்பத்தை அகற்றுவதே முதல் கையெழுத்தாக இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tamil News Live Today: அண்ணாமலைக்கு உடல்நலக் குறைவு; `என் மண், என் மக்கள்'  யாத்திரை ஒத்திவைப்பு! | Tamil News Live updates dated 04-10-2023 - Vikatan

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற 'என் மண் என் மக்கள்' நடைபயண 100-வது தொகுதி நிகழ்வில் உரையாற்றிய அண்ணாமலை, “இந்து சமய அறநிலையத் துறை எனும் துறையே பாஜக ஆட்சிக்கு வந்தால் இருக்காது. முகலாயர்களால் ஒழிக்க முடியாத சனாதன தர்மத்தை திமுகவால் மட்டும் எப்படி ஒழிக்க முடியும். கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை பரப்பியவன் அயோக்கியன்! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! இந்த வாக்கியங்கள் உள்ள பலகைகளை பாஜக ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடம் அகற்றுவோம். ஊழல், வம்ச அரசியல், திறமையற்ற நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு போன்றவற்றால் திராவிட ஆட்சிக்கு மாற்றாக தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு கோவில் முன்பு உள்ள ஈவெரா சிலைகள் அனைத்தும் பாஜக ஆட்சி அமைந்தவுடன் அகற்றப்படும். தமிழகத்தில் இருந்து திமுக, அதிமுகவை ஒழிக்க வேண்டிய நாள் நெருங்கிவிட்டது, மக்களுக்கு மாற்றம் தேவை” என்றார்.