சீமான் வழக்குக்கு பயந்து திமுகவை பங்காளி எனக்கூறுகிறார்- அண்ணாமலை

 
அண்ணாமலை

நெல்லை மாவட்ட பாஜகவின் இளைஞர் அணி நிர்வாகி சகோதரர் ஜெகன் பாண்டியனை வெட்டி படுகொலை செய்த திமுக நிர்வாகி மூலிக்குளம் பிரபு கைது செய்யப்பட்டுள்ளார். 

படுகொலை செய்யப்பட்ட ஜெகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பல்லடத்தில் பாஜக நிர்வாகி குடும்பத்தோடு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் என்பதில் உறுதி. காவல்துறையில் சட்டம் ஒழுங்கையும், குற்றப்பிரிவையும் பிரிக்க வேண்டும். காவல்துறையின் செயல்பாடுகளில் அரசியல் விமர்சனங்களை வைக்க விரும்பவில்லை. தென் தமிழகத்தில் வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பிரச்சனை குறித்து பேசாமல் இந்தியா கூட்டணி குறித்து பேச முதல்வர் புறப்பட்டுள்ளார். 

கும்மிடிப்பூண்டியை தாண்டி திமுக எதுவும் செய்யமுடியாது. மோடி சமூகம் குறித்து ராகுல், பேசியதை போல சனாதனம் குறித்து உதயநிதி பேசியுள்ளார். 6 முறை ஆட்சியிலிருந்தும் சமூகநீதியை கொண்டுவரமுடியவில்லையா? தைரியமான அரசியல்வாதியான சீமான் வழக்குக்கு பயந்து திமுகவை பங்காளி என கூறுவது வருத்தம் அளிக்கிறது” என்றார்.