“அரசியலில் கம்முனு இருக்க முடியாது! பேச வேண்டிய இடத்தில் பேசுங்கள் விஜய்”- அண்ணாமலை அட்வைஸ்

 
ச்

பேச வேண்டிய இடத்தில் பேசுங்கள் விஜய், அரசியலில் கம்முனு இருக்க முடியாது என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் உருவான போது மகாத்மா காந்தி பெயர் வைக்காதது ஏன்..? காங்கிரஸ் கபட நாடகம் போடுகிறது. சுவச் பாரத் திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயரை சூட்டியவர் பிரதமர் மோடி. பேச வேண்டிய இடத்தில் பேசுங்கள் விஜய், அரசியலில் கம்முனு இருக்க முடியாது. புதுச்சேரி அமைச்சருக்கு அதிகாரமில்லை என்று பேசியவர் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காதது ஏன்? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் அமைதியாக இருப்பது சரியல்ல. தவெக தலைவர் விஜயை பார்த்தால் திமுகவுக்கு பயம்.  நான் பேசவே மாட்டேன் வேடிக்க மட்டும் பார்ப்பேன் என்றால் உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பு தருவாங்க

திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூண் என்பதே தீபம் ஏற்றுவதற்கானது தான். தேர்தல் வரும்போது மக்களின் கோபம் எதிரொலிக்கும். மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பிரச்சனை? கோயில் உச்சியில் தீபம் ஏற்றினால் அதனை பார்த்து நம்முடைய மகளிரும் வீட்டில் விளக்கு ஏற்றுவார்கள், இதான் ஐதீகம், இதுதான் நடைமுறை, இதுதான் அறிவியல். வருடத்திற்கு ஒரு முறை கூட திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் பக்தர்களால் தீபம் ஏற்ற முடியவில்லை. UPA ஆட்சிக்காலத்தை விட 4 மடங்கு அதிக நிதிப்பகிர்வை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டம் மூலம் மேற்கொள்ளப்படும் வேலைகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கே பயன்தரும். அதனால் 60% நிதியை நாங்கள் தருகிறோம்.40% நிதியை மாநில அரசுகள் வழங்க வேண்டுமென மத்திய அரசு கூறுகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது?” என்றார்.