"திமுக ரூ.39 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது"- அமித்ஷா பரபரப்பு தகவல்

 
"திமுக ரூ.39 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது"- அமித்ஷா பரபரப்பு தகவல்

மதுபான கொள்கையில் திமுக ரூ.39 ஆயிரம் கோடி ஊழலை செய்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நீட் தேர்வு, தொகுதி வரையறை மும்மொழி கொள்கை போன்றவற்றில் உள்ளிட்ட பிரச்சனைகளை அதிமுகவின் கருத்தை கேட்டு தமிழக நலன் கருதி கருத்தொற்றுமை ஏற்படும் வகையில் முடிவு எடுப்போம். ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்னையை திமுக கையில் எடுத்துள்ளது, மக்கள் பிரச்னைகளை திசை திருப்ப நீட் தேர்வு விவகாரத்தை பேசுகிறது திமுக. மதுபான கொள்கையில் திமுக ரூ.39 ஆயிரம் கோடி ஊழலை செய்துள்ளது. இலவச வேட்டி வழங்குவதிலும் ஊழல், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது. மணல் ஊழல், எரிசக்தி ஊழல் என பல்வேறு 
ஊழல்களை திமுக செய்துள்ளது. திமுக ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு, தலித் மக்கள் மீதான தாக்குதல், டாஸ்மார்க் ஊழல், போதைப் பொருள், மணல் கொள்ளை என பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும். 

அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த மாறுபாடும், குழப்பமும் இருக்காது. உறுதியான கூட்டணியாக தேர்தலை சந்திப்போம். இணைந்துதான் ஆட்சியமைக்கப் போகிறோம். கூட்டணி ஆட்சி தான் நடக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி அமைகிறது. வெற்றிக்குப் பின் மற்றவை முடிவு செய்யப்படும்” என்றார்.