இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பாஜக கூட்டணி கட்சிகள் பங்கேற்பு!

 
BJP

தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளன. 

இன்றைய தினம், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். புனித ரமலான் மாதத்தில், இஸ்லாமிய சகோதர சகோதரிகள், பசித்திருந்து, விழித்திருந்து மேற்கொள்ளும் இப்தார் நோன்பானது, இறை நம்பிக்கையையும் உள்ளத் தூய்மையையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் சிறப்புமிக்கது. 


சிறப்பு மிக்க இன்றைய நோன்பு திறப்பு விழாவில், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் அண்ணன் திரு  @GK__Vasan , காமராஜர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர், ஐயா தமிழருவி மணியன், அமமுக பொதுச்செயலாளர் அண்ணன் திரு  @TTVDhinakaran , முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு  @OfficeOfOPS, புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவர் அண்ணன் திரு  @DrACSofficial, இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் அண்ணன் திரு  @iRaviPachamuthu அகில இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் அண்ணன் திரு அபூபக்கர் ஆகியோருடன் கலந்து கொண்டது மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.