”இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டி; பொறுத்து இருந்து பாருங்க..” - ஓபிஎஸ்
Mar 13, 2024, 09:53 IST1710303793424
பாஜக கூட்டணி மெகா கூட்டணியாக அமைந்துள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
பாஜக உடன் பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வருகை புரிந்தார். ஓ.பி.எஸ். உடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். முன்னதாக அமமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்த போது, அதிக கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் பாஜக கூட்டணி மெகா கூட்டணியாக அமைந்துள்ளது. ஒரே தொகுதியை பல்வேறு கட்சிகள் கேட்க வாய்ப்புள்ளதால் பேச்சுவார்த்தைக்கு பின் இறுதி முடிவு எடுக்கப்படும் இரட்டை இலை சின்னத்தை பெற்று கண்டிப்பாக அதில்தான் போட்டியிடுவோம் என்றார்.