தீபாவளி குப்பைகளை விரைவாக அகற்றி தூய்மைபடுத்திய பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து

 
briyani

தஞ்சாவூரில் தீபாவளி குப்பைகளை விரைவாக அகற்றி தூய்மை படுத்திய 100 தூய்மை பணியாளர்களுக்கு  தனியார் தொண்டு நிறுவனம் மட்டன் பிரியாணி விருந்து வழங்கினர். 

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையின் போது பட்டாசு குப்பைகள், வியாபாரம் செய்த துணிமணி பிளாஸ்டிக் குப்பைகள் என தஞ்சை மாநகரம்  முழுவதும் டன் கணக்கில்  குப்பைகள் சேர்ந்தன. இதனை நூற்றுக்கும் மேற்பட்ட  தூய்மை பணியாளர்கள் 60 வாகனங்களில் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு மாநகரம் முழுவதையும் தூய்மைப்படுத்தினர்.

நேரம் காலம் பார்க்காமல் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில், தனியார் தொண்டு நிறுவனம்  சார்பில் 100  தூய்மை பணியாளர்களை உயர்தர அசைவ உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சுட சுட முட்டையுடன் மட்டன் பிரியாணி வழங்கி கௌரவிக்கப்பட்டது