சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!
Jul 13, 2026, 11:45 IST1783923325307
லண்டனில் இருந்து 224 பயணிகள், 12 விமான ஊழியர்களுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னை வந்தது. சென்னையில் தரையிறங்கும்போது சுமார் 500 அடி உயரத்தில் பறவை மோதி என்ஜின் பகுதியில் சிக்கியது. விமானி சாமர்த்தியமாக தரையிறக்கியதால் விமானத்தில் இருந்த 236 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
பறவை மோதிய பகுதியை ஆய்வு செய்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேர ஆய்வுக்கு பின் லண்டன் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை லண்டன் செல்ல தயாராக இருந்த பயணிகள் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முழு ஆய்வுக்கு பின்னரே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

