வீடுகளில் இருந்து தரம்பிரித்து பெறும் மக்கும் குப்பைகளை எரிவாயுவாக மாற்ற வேண்டும்- விஜய்
வீடுகளில் இருந்து தரம்பிரித்து பெறும் மக்கும் குப்பைகளை எரிவாயுவாக மாற்ற வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் இயற்கை எரிவாயு உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. காய்கறி, உணவுக்கழிவுகள் மூலம் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த மையத்தில் சென்னையில் சேகரிப்படும் கழிவுகள் மூலம் உயிரி எரிவாயு உற்பத்தி செய்யும் மையங்கள் செயல்பட்டுவருகிறது. அந்த திடக்கழிவு மேலாண்மை நிலையத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு பின் சென்னை மாநகரில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் 6,150 மெட்ரிக் டன் குப்பைகளை தரம்பிரித்து பெறும் மக்கும் குப்பைகளை எரிவாயுவாக மாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்காத குப்பைகளை தார்ச்சாலை அமைப்பதற்கும், சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கும் வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முழுவதிலும் காலக்கெடு நிர்ணயித்து நகர்ப்புறங்களில் செயல்படுத்திடவும் முதல்வர் விஜய் ஆணையிட்டுள்ளார்.

