ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்கள்
தமிழ்நாடு அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தற்பொழுது அவை மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் நிறைவேற்றும் வேண்டும் என அரசு விரும்புவதால் அது தொடர்பாக நாளை மறுநாள் சனிக்கிழமை அன்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூட்டப்பட உள்ளது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பக்கூடிய மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது குடியரசு தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும் அல்லது ஏதேனும் நிறை, குறைகள் இருக்குமாயின் திருப்பி அனுப்ப வேண்டும். தற்பொழுது சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். 2 மசோதாக்களை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்கள்
✦ சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா