ரூ.1.12 லட்சம் கோடியை வழங்கிய பில் கேட்ஸ் - உலகையே வியக்க வைக்கும் மிகப்பெரிய ஜீவனாம்சத் தொகை!
பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியோர் கடந்த ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். விவகாரத்து ஆகஸ்ட் 2021 இல் இறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
2000-ம் ஆண்டு, 'பில் & மெலிண்டா கேட்ஸ்' அறக்கட்டளை என்ற பெயரில், பில்கேட்ஸ் மற்றும் அவர் மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் இணைந்து, ஒரு தனி அறக்கட்டளையை நிறுவினர். இந்த அறக்கட்டளையில் ஆரம்ப சுகாதாரம், கல்வி மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இப்போது வரை இந்த அறக்கட்டளை தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
இந்தநிலையில், மைக்ரோசாப்ட் உரிமையாளரான பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார். 2021ல் ஒப்புக்கொண்ட விவாகரத்து ஒப்பந்தப்படி ரூ.1,12,800 கோடி ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டிருந்தார் பில்கேட்ஸ். ஏற்கனவே ரூ.41,700 கோடியை மெலிண்டாவுக்கு பில்கேட்ஸ் வழங்கிய நிலையில், இறுதியாக தற்போது ரூ.71,100 கோடி வழங்கப்பட்டுள்ளது.


