காதலில் விழுந்த பள்ளி மாணவி- கடத்திச் சென்ற பீகார் இளைஞர் கைது!

 
arrested

கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியை சேர்ந்த தம்பதிகளின் 16 வயது மகள், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில், தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அங்கித்குமார் சிங் என்ற சூர்யா(29) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த 5ம் தேதி கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்ற மாணவி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.   இதையடுத்து மாயமான மகளை கண்டுபிடித்து தருமாறு வடபழனி போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில். பெயிண்டர் அங்கித்குமார் சிங் மாணவியை மயக்கி கடத்தி சென்றது தெரிந்தது. 

செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் அவர்கள்  பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், அங்கித்குமார் சிங்கை கைது செய்து, மாணவியை பத்திரமாக மீட்டனர். போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த அங்கித்குமார் சிங்கை  சிறையில் அடைத்தனர்.