”உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போகாத…” - விஜய் சொன்ன ஜல்லிக்கட்டு காளை Story! பொங்கி எழுந்த பிக்பாஸ் ஜூலி

 
ஜூலி

நடிகர் விஜய் தனது வேலூர் பிரச்சாரத்தில் சொன்ன குட்டி ஸ்டோரியை பிக்பாஸ் ஜூலி காட்டமாக விமர்சித்துள்ளார்.

இத்தொடர்பாக ஜூலி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஹாய் அண்ணா.. ஜூலி! இப்போதுதான் உங்க வேலூர் பரப்புரை பார்த்தேன். எப்போதும்போல இந்த பரப்புரையிலும் ஒன்றும் இல்லை. இந்த ஜல்லிக்கட்டு காளையை பத்தின ஒரு குட்டி ஸ்டோரி சொன்னிங்கல்ல.. அதை கேட்ட பிறகு என்னால பேசாம இருக்க முடியல... நீங்க பாட்டுக்கு போறபோக்குல... ஒரு ஜல்லிக்கட்டு காளை நின்னுச்சு! அத பார்த்த ஒரு குழந்தை புல்லுக்கட்ட கொண்டு போய் கொடுத்து ஓரமா விட்டுச்சுனு போய்ட்டே இருப்பீங்க.. உங்க கட்சியில இருக்கிற பாதி பேர் மைனர் ஆளுங்க... நானும் போய் புல்லுக்கட்ட காட்றேனு எதாச்சும் ஒன்னுக்கிடக்க ஒன்னு ஆயிட்டுனா என்ன பன்றது? 50... 50 ஆகவே இருக்கட்டும் அதை 500 ஆக்கிடாதீங்க.. கஷ்டப்பட்டு, எல்லாரும் போராடி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வாங்கி வச்சிருக்கும். அது இப்ப சிறப்பா நடந்துட்டும் இருக்கு! உங்க ரசிகர்கள் போய் புல்லுக்கட்ட காட்டுகிறேனு எதாச்சும் ஆயிபோச்சுனா? திரும்பலாம் இங்க போராட்டம் பண்ண திராணி இல்ல அண்ணா. பார்த்து பக்குவமா பண்ணு அண்ணா... உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போதாதீங்க” எனக் கூறியுள்ளார்.


விஜய் அண்ணா தமிழக வெற்றிக் கழகத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை 50ஆகவே இருக்கட்டும், நீங்க சொல்லும் கதையைக் கேட்டு உங்களின் ஆர்வக்கோளாறான ரசிகர்கள் ஜல்லிக்கட்டு காளைக்கு புல் கொடுக்கிறேன் என்று சென்று, அந்த எண்ணிக்கை 500 ஆக மாறிவிடப் போகிறது என்று ஜூலி பேசியது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.