மிசாவில் ஸ்டாலினின் தாடை உடைப்பு - கண்ணீர் விட்டு கதறும் ஜூலி

 
julie

நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் விஜய், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, முரசொலி மாறன் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் அரசியல் வரலாற்றையும் மிசா கைது குறித்தும் விமர்சித்துப் பேசினார். அப்போது, மிசா சித்திரவதையின் போது மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தாடைப் பகுதி காயங்களைக் கேலி செய்யும் வகையில் அவர் செய்த உடல்மொழி செய்கை (Body Language) பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

Q
இந்நிலையில் இன்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “சட்டசபையில் நடந்த சர்ச்சைகள் தமிழ் மக்களுக்கும், நமது உடன்பிறப்புகளுக்கும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியதை நான் உணர்கிறேன். இந்தச் சர்ச்சையில் எனது சிறை வரலாறு இருப்பதால், அதைப் பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். சிறையில் பல கொடுமைகள் நடந்தன. எங்களை அடைத்தே தொழுநோயாளிகள் இருந்த அறையில்தான். 10 பேரைச் சிறிய அறைக்குள் அடைத்தார்கள். அங்குதான் அனைவரும் சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரே துர்நாற்றமாக இருக்கும். அங்குதான் நாங்கள் தூங்க வேண்டும். இரவில் தூங்க விடாமல், போலீஸ் எங்களை லத்தியால் அடிப்பார்கள், பூட்ஸ் காலால் மிதிப்பார்கள். மறுபக்கம், ஆயுள் தண்டனைக் கைதிகளை வைத்து அடிப்பார்கள். அவர்கள் தாக்கியதில் என் அண்ணன் எம்.பி. சிட்டிபாபு சிறையிலேயே இறந்துவிட்டார்.அவர்கள் தாக்கியதால் என் தாடை உடைந்தது. நீங்கள் கை வைத்து தாடையைக் காட்டியது சரிதான். இன்றும் நான் அடி வாங்கிய தழும்புகள் எனக்கு இருக்கின்றன. முதல்வராக பொறுப்பேற்ற பின் வீட்டிற்கு வந்தபோது, பிரசாரத்தின் போது அதிகமாக விமர்சித்து விட்டேன் என மன்னிப்பு கோரியதை மறந்துவிட்டீர்களா? அதை நான் மனதில் வைத்துக்கொள்ளவில்லை. அப்போதும் யாரை பற்றி பேசும்போதும் கண்ணியத்துடன் பேசுங்கள் என ஆலோசனை கூறினேன். அதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல” எனக் கூறியிருந்தார். இதற்கு தவெகவினரும், விர்ச்சுவல் வாரியர்ஸ் நெட்டிசன்களும் எக்ஸ் தளத்தில் எதிர்வினைகளை ஆற்றினர்.


இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிக்பாஸ் ஜூல், “காலையில் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவை பார்த்து மனசு ஓரு மாதிரி ஆயிடுச்சி, ஒரு மனுஷன் அவர் பட்ட கஷ்டத்தை சொல்றாரு, தாடை உடைக்கப்பட்டுச்சுனு சொல்றாரு, நீங்க எந்த கட்சியாக வேண்டுமானாலும் இருக்கலாம், எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் சப்போர்ட் பண்ணலாம். ஆனால் வரலாற்றில் நமக்காகவும் போராடிருக்காங்கனு ஒரு விஷயம் இருக்கும்ல. அதையெல்லாம் தாண்டி ஒருத்தர் மேலே வெறுப்பு காட்டுறீங்க. கேலி பண்றீங்கல்ல... அதற்கான வரலாறு என்னானு தெரியாம கேலி பண்ண கூடாது. ஏன் ஒருத்தரோட மாண்பை குறைச்சு இப்படி ஒரு விஷயம் செய்யுறீங்க. நீங்க யாரோட ஆதரவாளரா வேண்டுமானாலும் இருக்கலாம்... ஆனால் தப்பு. வரலாற்றை தெரிந்துகொள்ளுங்க...மிசாவில் எவ்வளவு கஷ்டப்பட்டாங்கனு தெரிஞ்சிகிட்டு அரசியல் விமர்சனம் ஒகே, கேலி, கிண்டல் பண்ணாதீங்க. யோசிச்சு பாருங்க அப்படி பண்ணா எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு... காலையிலேயே தலைவரை அழுகவச்சிட்டிங்க” என கண்ணீர் விட்டு அழுகிறார்.