பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகர்!
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகியதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
விஜய் டிவியில் 7 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த முறை 8 -வது முறையாக விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன், ஒரு கால்ஷீட்டுக்கு 4 கோடி வீதம் 15 நாட்களுக்கு 60 கோடி ரூபாய் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சம்பளம் பெறுவதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த சீசனில் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. இதனை நடிகர் கமல்ஹாசனே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகியதைத் தொடர்ந்து, தற்போது விஜய் சேதுபதியை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்பட உள்ளது. இதற்கான promo ஷூட்கள் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.