வீடியோ வெளியானது : பிக்பாஸ் முத்துக்குமரன் மீது புகாரளித்து தற்கொலைக்கு முயன்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

 
1

பட்டிமன்ற பேச்சாளரான முத்துக்குமரன் யூடியூபராகவும் இருந்து வருகிறார். ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்ற இவர், பிக்பாஸ் சீசன் 8-ல் தனது பேச்சுத் திறமையால் இறுதிவரை முன்னேறி டைட்டில் வென்றார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்நிலையில்,பிக்பாஸ் வின்னர் முத்துக்குமரன் மீது இன்ஸ்டா பிரபலம் வஹிதா பேகம் வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் பிரபலமான வஹிதா அக்தார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில். “நான் கடந்த சில நாட்களாக பிரேக்-அப் காரணமாக மனமுடைந்து இருந்தேன். அப்போது சென்னை கத்திப்பாராவில் எதேச்சையாக முத்துக்குமரனை சந்தித்தேன். அவர் கியூட்டாக சில விஷயங்களைச் செய்தார். என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். எனக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது; இருந்தும் அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொண்டார். பின்னர், அடுத்த நாள் வீட்டிற்குச் சென்றுவிட்டு, அவரிடம் திருமணம் குறித்துப் பேசியபோது அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து வந்தார். மேலும், தனக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் கூறிவிட்டார்”.இந்த அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து, வஹிதா தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரது நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சர்ச்சைக்கு மத்தியில் வஹிதா பேகம் வெளியிட்ட மற்றொரு வீடியோவும் தற்போது கவனம் பெற்றுள்ளது. அதில் முத்துக்குமரனும் வஹிதா பேகமும் ஒன்றாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் காட்சியில் முத்துக்குமரன், வஹிதா பேகத்தின் கன்னத்தை பிடித்தபடி “இந்த மூஞ்ச எனக்கு புடிச்சிருக்கு” என்று கூறுவது பதிவாகியுள்ளதாக சமூக வலைதளப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

அந்த வீடியோவுடன் வஹிதா பேகம் வெளியிட்ட பதிவில்,

" அப்படின்னா நீ என்கிட்டே விளையாடிட்ட ரைட்! என்னய ஏமாத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸ். அதவிட்டுட்டு வீடியோஸையும் நிறுத்த சொல்லி நீ கெஞ்சாத.

என்கிட்ட பேசிட்டு, நம்ப வச்சீங்களே... அப்போ இருந்த அந்த தைரியத்துல கொஞ்சமாச்சும் யூஸ் பண்ணி, முடிஞ்சா Truth-ஐ பேசிக்கோங்க. இல்லனா உங்களுக்கு என்ன வேணுமோ அதை பண்ணுங்க.

But எனக்கு கால் பண்ணாதீங்க. திரும்பவும் என்னை எதுவும் புஷ் பண்ணாதீங்க. நீங்க சொன்னது எல்லாமே விளையாட்டுக்குத்தான்னு இப்போ புரிஞ்சிடுச்சு

பெரிய தேங்க்ஸ்... எதுக்குத்தான் திரும்பி என்னை காப்பாத்துனீங்களோ தெரியல... என்னால முடியல.

எல்லாமே பொய்யா போச்சு."

என்று கூறியுள்ளார்.