எனக்கு நடந்தது ஒரு கிரைம்!– பிக்பாஸ் முத்துக்குமரன் மீது இளம்பெண் மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு..!!
தீபாவளி பண்டிகையொட்டி முத்துக்குமரன் சாப்பிடுவது போன்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதனை தொடந்து இன்ஸ்டா பிரபலம் வெளியிட்ட வீடியோவில்,
என்னை ஏமாற்றி விட்டேன் என்று சொல்லு. இல்லையென்றால் ஏமாற்றவில்லை என்று சொல்லு. ஏதாவது ஒரு பதிலை சொல்லு. எனக்கு நடந்தது ஒரு கிரைம். ஆனால் அவன் என் மீது பழி போட்டு விட்டான். சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனை செய்து இருந்தால் நான் சொன்னது உண்மை என்று நிரூபித்து இருக்கலாம் என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் முத்துக்குமரன் பிரபலமானார். இவர மீது சமீபத்தில் இன்ஸ்டாவில் பிரபலமான இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்ததாகக் கூறி தவறான முடிவெடுத்து உயிரை விட முயன்றார். இந்த சூழலில் முத்துக்குமரனும் இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். சம்பந்தப்பட்ட இளம் பெண் தரப்பில் எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.. இன்ஸ்டாகிராம் மூலமாக அவ்வப்போது சில பதிவுகளை மட்டும் வெளியிட்டு விமர்சித்து வருகிறார்.
இந்த சூழலில் தீபாவளி பண்டிகையொட்டி முத்துக்குமரன் சாப்பிடுவது போன்று ஒரு வீடியோ பதிவை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதனை பார்த்த இன்ஸ்டா பிரபலம், ற்று ஒரு வீடியோ பதிவை அந்த இளம்பெண் வெளியிட்டார். அதில், "எனக்கு ஒரு கேள்வி உண்டு. பொய் சொல்பவர்கள் மீது உண்மை கண்டறியும் சோதனை செய்யலாமா? முத்துக்குமரனை சிறையில் தள்ளுவது எனது நோக்கம் அல்ல. எனக்கு நியாயம் தான் தேவை. எனவே உண்மை கண்டறியும் சோதனை செய்ய இயலுமா?
ஏதாவது ஒன்று என்றால் என் கடந்த காலத்தைப் பற்றி பேசி விமர்சித்து வருகிறார்கள் முத்துக்குமரனும் நானும் ஒன்றுதான். ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டமா?. இப்போதும் அவனை சிறையில் தள்ள வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. ஏனெனில் அவனை அந்தளவுக்கு நான் விரும்புகிறேன்.
என்னை ஏமாற்றி விட்டு எப்படி அவனால் நிம்மதியாக சாப்பிட முடிகிறது?, தங்கத்தில் தாலி கட்டுவேன் என்று என்னென்னமோ என்னிடம் சொன்னான். செய்த தவறை உணர்ந்து வருந்தி திருந்துவான் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஏன் அவனுக்கு ஒரு வினாடி கூட உறுத்தவில்லை. நான் ஏதோ அவனை அழைத்துச் சென்று கசமுசா செய்தது போல சமீபத்தில் பேசியிருக்கிறான்.
என்னை ஏமாற்றி விட்டேன் என்று சொல்லு. இல்லையென்றால் ஏமாற்றவில்லை என்று சொல்லு. ஏதாவது ஒரு பதிலை சொல்லு. எனக்கு நடந்தது ஒரு கிரைம். ஆனால் அவன் என் மீது பழி போட்டு விட்டான். சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனை செய்து இருந்தால் நான் சொன்னது உண்மை என்று நிரூபித்து இருக்கலாம். நேரில் நடந்த விஷயம் என்பதால் ஆதாரம் எதுவும் என்னிடம் கிடையாது. அப்போது புரியவில்லை, இப்போது தான் எல்லாமே புரிகிறது", என்று கூறியுள்ளார்.

